Thursday, February 5, 2009

அன்பரசு தந்த விருந்து

மாலை 4 மணி அளவில் பெருமாள் அவர்கள் ஜி-டாக்கில் அன்பரசு ட்ரீட் தருவதாக சொன்னார். அன்பரசுவும் அதை தொலைபேசி மூலம் உறுதி படுத்தினார்....சரி சீக்கிரம் என்று கிளம்பலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் அதுவரை மொக்கை போட்டு உட்கார்ந்திருந்த மதிப்பிற்குறிய என் பாஸ்...இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்தவராய் ஓடோடி வந்து வேலை ஒன்றை குடுத்து அவசரமாய் முடித்துகுடுக்குமாறு ஆணையிட்டு சென்று விட்டார், நானும் அரக்க பரக்க அந்த வேலையை முடித்து அவருக்கு அதை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பி போனேன். அங்கிருந்து சுமார் 7.30 மணியளவில் கிளம்பி நான், சிவராமன், அன்பரசு மற்றும் அவரின் துணைவியார் அனைவரும் கிளம்பி ஸ்பைஸ் மால்-க்கு போனோம், அங்கு எங்களுக்கு முன்னதாகவே திரு. தனபால் மற்றும் அவரின் துணைவியாருடன் வந்துவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் திரு.சரவணன் அவர் துணைவியாருடன் வந்து சேர்ந்தார், பின்பு ஜோடிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரும் காதலர் தின பரிசு பொருள் வாங்க சென்று விட்டனர், பாவம் குழந்தைகள் தான் (ஹி ஹி...நாங்க தான்...!) பசியால் வாடி போய்விட்டனர், பின்பு ஒரு வழியாக அனைவரும் சாப்பிடும் இடத்திற்க்கு வந்து சேர்ந்தனர். முன்பாக நானும் தம்பி ராஜலிங்கமும் திட்டம் தீட்டி நல்ல ஒரு பிகர் அமர்ந்திருந்த இடத்திற்க்கு முன்னால் சென்று அமர்ந்து விட்டிடுந்தோம் (பிறகு பிகர் கை கழுவ போன நேரத்தில் பிகரின் இடத்தில் அவருடைய அம்மா உட்கார்ந்து எங்களை மண்டை காய வைத்தது வேறு விஷயம்...). பின் அனைவரும் வந்தமர்ந்து அனைத்து கடைகளின் மெனு கார்டுகளை ரெஃப்ர் செய்து ஆர்டர் கொடுத்து சாப்பிட்டோம்....பின் வாங்கி சென்றிருந்த பரிசுகளை அன்பரசுவிடம் ஒப்படைத்து விட்டு, சிறிது நேரம் பழங்கதை பேசி விட்டு வீடு திரும்பினோம்.

No comments:

Post a Comment